'இரண்டாம் குத்து' டீசருக்கு தடை - நீதிமன்றம் அதிரடி!
'இரண்டாம் குத்து' டீசருக்கு தடை - நீதிமன்றம் அதிரடி!

By : Kathir Webdesk
சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் ஹாரர் காமெடி படமாக 18 வயது மேற்பட்டோர்கள் மட்டும் பார்க்கும் படமாக இரண்டாம் குத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது.
வெளியான முதல் நாளே இயக்குநர் பாரதிராஜா தனது கண்டனங்களை தெரிவித்தார். அதன் பின்னர் சினிமா துறையினர் மட்டுமின்றி மற்றவர்களும் தங்களது கண்டனங்களை சமூக வலைதளம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக பதிவிட்டு வந்தனர்.
படத்தில் ஆபாச காட்சிகளும் கொச்சையான இரட்டை அர்த்த வசனங்களும் கடும் எதிர்ப்பை சம்பாதித்தன. இயக்குனரும் இப்படத்தின் ஹீரோவுமான சந்தோஷ் பல எதிர்ப்புகளை சந்தித்தார். தன் தரப்பு வாதங்களை பல நேரங்களில் எடுத்து வைத்தார்.
இந்நிலையில், ‘இரண்டாம் குத்து’ திரைப்படத்தின் டீசரை சமூக வலை தளங்களில் இருந்து உடனடியாக நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என படக்குழுவால் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற இப்படிப்பட்ட அறிவிப்பு வெளியிடும் என்று படக்குழு நினைத்து பார்த்திருக்காது.
