Kathir News
Begin typing your search above and press return to search.

ஆக்கிரமிப்பில் தமிழ் சினிமா - புலம்ப துவங்கும் சிறு பட தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் எந்த ஒரு படத்தையும் விடாமல் அனைத்து படங்களையும் உதயநிதி நிறுவனம் கைப்பற்றி வருவதாக சலசலப்பு எழுந்துள்ளது.

ஆக்கிரமிப்பில் தமிழ் சினிமா - புலம்ப துவங்கும் சிறு பட தயாரிப்பாளர்கள்
X

Mohan RajBy : Mohan Raj

  |  27 Aug 2022 5:13 AM GMT

தமிழ் சினிமாவில் எந்த ஒரு படத்தையும் விடாமல் அனைத்து படங்களையும் உதயநிதி நிறுவனம் கைப்பற்றி வருவதாக சலசலப்பு எழுந்துள்ளது.





சமீபகாலமாக தமிழ் சினிமாவில் எந்த படம் வெளியாக வேண்டும் என்பதை உதயநிதி பட நிறுவனம் தான் முடிவு செய்கிறது. தமிழ் திரைஉலகின் சமீப மெகா பட்ஜெட் படங்களை முதல்வரின் மகனும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதிக்கு சொந்தமானது 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' பட நிறுவனமே கைப்பற்றி வருவதாக சலசலப்பு எழுந்துள்ளது.


கைவிடப்பட்டு கிட்டத்தட்ட வராது என விடப்பட்ட 'இந்தியன் 2' படத்தையும் லைக்காவுடன் இணைந்து உதயநிதி தயாரிக்கிறார். மேலும் சில பெரிய பட்ஜெட் படங்களையும் அவர் தயாரிக்க இருக்கிறார் என்பது அவ்வப்போது வெளியீடுகள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து திரையுலகில் தற்பொழுது ஆங்காங்கே சலசலப்பு எழுந்துள்ளது.





திரையுலகில் இது குறித்து சிலர் கூறும் பொழுது, 'தமிழகத்தில் எந்த படம் எந்த தியேட்டரில் வெளியாக வேண்டும் என்பதை ஒரு சிண்டிகேட் தான் முடிவு செய்கிறது, அதன் பின்னணியில் யாரெல்லாம் உள்ளனர் என்பது எல்லோருக்கும் தெரியும். பட்ஜெட்டை தாண்டி சிறிய பட தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் வழங்க வேண்டும் ஆனால் இன்று தியேட்டர் கிடைக்காமல் வெளியிட்டு தள்ளி வைக்கும் அவல நிலை பலருக்கு உள்ளது. மன்சூர் அலிகான் நடித்த தயாரித்துள்ள கடம்பன் பாறை படத்திற்கு திரையரங்கு கிடைக்கவில்லை.


அமலாபால் தயாரித்த கடவர் படத்தை திரையரங்கில் வெளியிடவில்லை இதனால் ஓ.டி.டி'யில் வெளியிட்டார். இங்கே படத்தை தயாரிப்பதை விட வெளியீடு சிரமமாக உள்ளது 'யானை', 'குருதி ஆட்டம்' படங்கள் வெளியீடு பலமுறை தள்ளி வைத்து பின்னர் வெளியிட்டனர்' என சுட்டிக்காட்டினர்.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News