த்ரிஷ்யம் 2 படத்துடன் தன்னுடைய படத்தை ஒப்பிட்ட தமிழ் பட இயக்குனர்!
த்ரிஷ்யம் 2 படத்துடன் தன்னுடைய படத்தை ஒப்பிட்ட தமிழ் பட இயக்குனர்!
By : Amritha J
மலையாள சினிமாவில் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கி 'த்ரிஷ்யம் 2’ திரைப்படம் சமீபத்தில் OTT-யில் ரிலீஸ் ஆன நிலையில் இப்படத்திற்கு அதிக பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வந்தன. மேலும் பல பிரபலங்களும் இப்படத்தை புகழ்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் த்ரிஷ்யம் 2 படத்தின் முதல் பாகத்தைப் போலவே 2-ம் பாகத்தையும் ரீமேக் செய்ய கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் உள்ள தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் த்ரிஷ்யம்-2 தெலுங்கு ரீமேக் படத்தின் பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் த்ரிஷ்யம்-2 படத்தின் வெற்றியை தனது படத்தின் 2-ம் பாகத்தின் வெற்றியோடு ஒப்பிட்டு 'தமிழ்ப்படம்' இயக்குனர் சி.எஸ்.அமுதன் காமெடியாக டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் இரண்டாம் பாகமாக வெளிவந்த இரண்டாவது சிறந்த படம் என்று இயக்குனர் சி.எஸ் அமுதன் அவரது டுவிட்டரில் 'த்ரிஷ்யம் 2' படம் குறித்து பதிவு செய்துள்ளார். மேலும் முதல் சிறந்த படம் அவருடைய 'தமிழ்ப்படம் 2’ என்பதை மறைமுகமாக அவர் குறிப்பிட்டு உள்ளதாகவே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.பொதுவாக தமிழ் சினிமாவில் வெளிவரும் இரண்டாம் பாக படங்கள் முதல் பாகம் போல் வெற்றியடையாமல் தோல்வி அடைந்துள்ளன என்பதும், அதில் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம் 2' படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Drishyam2 blew my mind. It’s the second best sequel ever made.
— CS Amudhan (@csamudhan) February 20, 2021