தீபாவளியை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறும் டாஸ்க்குகள்..!
தீபாவளியை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறும் டாஸ்க்குகள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேசன் இல்லை என்ற தகவல் அறிந்த போட்டியாளர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர் அந்தவகையில் இன்று வந்த முதல் ப்ரோமோவில் பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் அர்ச்சனாதான் இந்த டாஸ்க்கில் பாட்டியாக உள்ளார்.அதில் சொத்து பத்திரங்கள் அனைத்தையும் ஒரு பெட்டியில் போட்டு பூட்டி வைக்கும் அர்ச்சனா தன்னை யார் சந்தோஷமாக பார்த்துக் கொள்கிறார்களோ அவர்களுக்குதான் என் சொத்து பத்திரங்கள் என்று சொல்கிறார்.
இதனையடுத்து மொத்த ஹவுஸ்மெட்ஸும் பாட்டியை சந்தோஷப்படுத்த பார்க்கின்றனர். இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் மகிழ்ச்சி அலை மோதுகிறது. ஆனால் எல்லாமே சொத்துக்காகதான் என புரிகிறது.
மேலும் அடுத்ததாக வந்த ப்ரோமோவில் அர்ச்சனா பத்திரமாக பூட்டி வைத்திருக்கும் பத்திரத்தை ஒருவர் திருடபோவதாக ப்ரோமோ அமைந்தது.அதனிடையே பிக்பாஸ் ரம்யா பாண்டியன் சோம் ஆகிய இருவருக்கும் நீங்கள்தான் அந்த பத்திரத்தை திருட போகிறிர்கள் என்று ஒரு டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார்.
அதை எவ்வாறு திருடுவது என்று அவர்கள் பிளான் செய்து கொண்டிருந்தது போல ப்ரோமோ முடிந்தது.இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான நிகழ்வுகளும் சந்தோஷங்களும் எவ்வாறு நடக்கிறது என்று இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும் இதை பார்த்து பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்வமாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.