நயன்தாராவின் பிறந்த நாளை அடுத்து "நெற்றிக்கண்" படத்தின் டீசர் வெளியீடு.!
நயன்தாராவின் பிறந்த நாளை அடுத்து "நெற்றிக்கண்" படத்தின் டீசர் வெளியீடு.!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா இன்றுவரை கதாநாயகியாக தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருபவர். இன்று நயன்தாராவின் பிறந்த நாளை அடுத்து அவர் நடித்த நெற்றிக்கண் படத்தின் டீஸரை வெளியிட உள்ளனர் படக்குழுவினர்.
நெற்றிக்கண் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் மனதை வென்றது. அதனை அடுத்து இன்று காலை 9.09 மணி அளவில் சமூக வலைத்தளங்களில் டீஸர் வெளியாக நல்ல வரவேற்பு பெற்றது.இப்படத்தின் இயக்குனர் 'மிலிந்த் ராவ்' கொரியன் திரைப்படமான 'பிளைண்ட்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்யை நெற்றிக்கண் என்ற பெயரில் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் கதை:விபத்தில் சிக்கும் ஒரு பெண் காவல்துறை அதிகாரி எதிர்பாராதவிதத்தில் தனது பார்வையை இழக்கின்றார் என்பதும் இந்த நிலையில் இவர் ஒரு முக்கிய வழக்கில் சாட்சி சொல்ல வருகிறார்.
இவர் சொல்லும் சாட்சியால் ஏற்படும் விபரீதங்கள் என்ன என்பது முழுக்க முழுக்க இன்னும் சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் ஒரு பட தொகுப்பாக எடுக்கப்பட்டுள்ளது.படம் முழுவதும் த்ரில்லர் காட்சிகளாகவே அரங்கேறுகிறது.வழக்கமான நயன்தாரா படங்களைப் போலவே இதுவும் ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.