விஜய் சேதுபதி படத்தின் டீசர் வெளியீடு! அரசியல் படமாக இருக்குமோ?
விஜய் சேதுபதி படத்தின் டீசர் வெளியீடு! அரசியல் படமாக இருக்குமோ?
By : Amritha J
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அந்த வகையில் நான்கு திரைப்படங்கள் நடித்து முடித்து வெளியாக தயாராக இருக்கும் நிலையில் 'துக்ளக் தர்பார்' படத்தின் டீசர் 12.30 மணி அளவில் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம் இருவருக்கும் இடையே உள்ள மறைமுகமான அரசியல் குறித்த கதை அம்சம் கொண்ட திரைப்படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பார்த்திபனை கூட இருந்தே குழி பறிக்கும் விஜய் சேதுபதியின் தந்திரமான நடவடிக்கைகள்தான் இந்த படத்தின் கதை என்று இந்த டீசரில் இருந்து தெரிகிறது. எவனோ ஒருத்தன் கூட இருக்கான், என்னை யூஸ் பண்றான், நல்லா வெச்சு செய்கிறான் என்னை என்று விஜய் சேதுபதி கூறுவதிலிருந்தே அவர் பார்த்திபனை தான் கூறுகிறார் என்று தெரிகிறது.
அதேபோல் பார்த்திபன் நமக்கு தெரியாத ஒருத்தன், ஆனா நம்ம விஷயத்தை எல்லாம் தெரிஞ்ச ஒருத்தன், யார் அந்த நாலாவது ஆள் என்று பார்த்திபன் விஜய் சேதுபதி குறித்து அவரிடமே கேட்கும் காட்சியும் அட்டகாசமாக உள்ளது.
இறுதியில் விஜய் சேதுபதி எப்படி என்றாலும் என்னை நீங்கள் சும்மா விடப்போவதில்லை, அதனால் நானும் உங்களை சும்மா விட மாட்டேன். வாங்க நேரடியாக மோதி பார்க்கலாம்’ என்று விஜய் சேதுபதி அதிரடியாக களத்தில் இறங்கும் காட்சிகளும் இந்த டீசரில் உள்ளது.
விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷிகண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு கோவிந்து வசந்தா இசையமைத்துள்ளார் என்பதும் வழக்கம்போல் அவரது பின்னணி இசை அட்டகாசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசரே அட்டகாசமாக இருப்பதால் படத்தை உடனே பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#TughlaqDarbar Teaser Out Now... Starring: #VijaySethupathi, #RaashiKhanna Directed by @DDeenadayaln #TughlaqDarbarTeaser @VijaySethuOffl @RaashiKhanna pic.twitter.com/pxnj8jf4F0
— Olid Ahmed Razu (@Iamolid) January 11, 2021