பிரபுதேவா நடித்த 'பஹிரா' படத்தின் வித்தியாசமான டீசர் வெளியீடு.!
பிரபுதேவா நடித்த 'பஹிரா' படத்தின் வித்தியாசமான டீசர் வெளியீடு.!
By : Amritha J
தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனரான நடிகர் பிரபுதேவா நடித்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பஹிரா' திரைப்படத்தின் டீசரை தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அந்த டீசரில் பிரபுதேவாவின் வித்தியாசமான தோற்றத்துடன், த்ரில் காட்சிகள் நிறைந்த முற்றிலும் வித்தியாசமான கதையாக வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் பிரபு தேவாவுடன் ஜனனி ஐயர், காயத்ரி சங்கர், சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன் என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த டீசரில் பிரபுதேவா ஒவ்வொரு பெண்களையும் கொல்லும் சைகோ. சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, உன்னை சிக்க வச்சு கொல்லுரேண்டி மயிலே என்று வசனம் பேசி கொலை செய்யும் காட்சி த்ரில்லாக உள்ளது. செல்வகுமார் ஒளிப்பதிவில், கணேசன் சேகர் இசையில் இப்படம் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Very happy to release my dear friends @PDdancing sir and @AmyraDastur93 #BagheeraTeaser https://t.co/orqxSGajlL@Adhikravi
— Dhanush (@dhanushkraja) February 19, 2021