தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி.! வருத்தத்தில் ரசிகர்கள்..!
தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி.! வருத்தத்தில் ரசிகர்கள்..!
By : Amritha J
தெலுங்கில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று இருப்பதாக அவரே, அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.
இந்தியா முழுவதும் கொரோனா பரவலுக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த கொரோனாவால் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நடிகர், நடிகைகள் உட்பட பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.நடிகர் சிரஞ்சீவி தற்போது ஆச்சார்யா மற்றும் தல அஜித்தின் வேதாளம் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கியதை அடுத்து ஆச்சார்யா படப்பிடிப்பை தொடங்குவதற்காக சிரஞ்சீவி கொரோனாவுக்கான பரிசோதனை செய்துகொண்டார் அதில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்டவுடன் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் சிரஞ்சீவி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தன்னுடன் இருந்தவர்களையும் பரிசோதனை மேற்கொள்ளும் படி பரிந்துரைத்துள்ளார்.இதை அறிந்த ரசிகர்கள் இவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் திரையுலகினர் பலரும் விரைவில் குணமடைய வேண்டி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.