Kathir News
Begin typing your search above and press return to search.

லியோ பட வெற்றி விழாவில் குட்டி கதை சொல்லி அரங்கத்தை அதிர வைத்த தளபதி!

லியோ படத்தின் வெற்றி விழாவில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தளபதி விஜய் ஒரு குட்டி கதை சொன்னார்.

லியோ பட வெற்றி விழாவில் குட்டி கதை சொல்லி அரங்கத்தை அதிர வைத்த தளபதி!
X

KarthigaBy : Karthiga

  |  3 Nov 2023 8:36 AM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் திரையிட்ட நாள் முதல் இன்று வரை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகவும் இப்படம் அமைந்தது. வெளியிட்ட முதல் நாளிலேயே 148 கோடி ரூபாய் வசூலித்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்றுள்ளது லியோ.

அது மட்டும் இல்லாமல் முதல் வாரத்தில் லியோ பட வசூல் 461 கோடியை தாண்டியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை கொண்டாடும் விதமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ பட வெற்றி விழா நடைபெற்றது. இதில் அனைவரும் கலந்து கொண்டனர்.லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடி பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட்டி கதை சொன்னார் .

அதில் ஒரு காட்டிற்கு இரண்டு வேட்டைக்காரர்கள் வேட்டைக்குச் சென்றார்கள். காட்டில் பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு வேட்டைக்காரர் வில் அம்போடு சென்று முயலை வீழ்த்தி முயலுடன் திரும்பி வந்தார் . இன்னொரு வேட்டைக்காரர் யானைக்கு குறி வைத்து யானையை வீழ்த்த முடியாமல் வெறும் கையோடு திரும்பி வந்தார். இதில் யார் வெற்றியாளர் என்று ரசிகர்களை பார்த்து கேள்வி கேட்டார். நிச்சயமாக யானைக்கு குறி வைத்து வெறும் கையோடு வந்தவர் தான் வெற்றியாளர். ஏனெனில் எண்ணும்போதே பெரிய பெரிய விஷயங்களை நாம் எண்ண வேண்டும்.

நாம் குறிக்கோளாக வைக்கும் விஷயங்கள் பெரிதாக இருக்க வேண்டும். கனவு காண்பதும் பெரிய அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும். இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அந்த கனவுதான் நம் வெற்றியின் இலக்கை நிர்ணயிக்கிறது. அதை நோக்கி பயணிக்க வேண்டும் என்று கூறினார். இந்த கதையினால் மகிழ்ந்த ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தனர் .அரங்கமே அதிர்ந்தது.

SOURCE :Daily thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News