Kathir News
Begin typing your search above and press return to search.

#Thalapathy66 'தளபதி 66' - இணையும் பிரபல இயக்குனர் யார்?

#Thalapathy66 தளபதி 66 - இணையும் பிரபல இயக்குனர் யார்?

Mohan RajBy : Mohan Raj

  |  30 May 2021 6:45 AM GMT

விஜயின் அடுத்த படத்தை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

விஜய் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் 'தளபதி 65'ல் நடித்து வருகிறார். தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வம்சி பைடிபள்ளி. இவர் விஜய் நடிக்க உள்ள 66வது படத்தை இயக்கப் போவதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வெளிவந்தன. சமீபத்திய பேட்டி ஒன்றில் அது உண்மைதான் என வம்சி பைடிபள்ளி தெரிவித்திருக்கிறார்.


இது பற்றி கூறிய இயக்குனர் வம்சி "எனது திரையுலகப் பயணத்தில் இப்படம் மிகப் பெரும் பட்ஜெட் படமாக இருக்கும். கோவிட் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு படம் பற்றிய அறிவிப்பு வரும். தில் ராஜு இப்படத்தைத் தயாரிக்கிறார், தளபதி விஜய் நாயகனாக நடிக்கிறார்," எனத் தெரிவித்துள்ளார்.


வம்சி பைடிபள்ளி தெலுங்கில் பிரபாஸ் நடித்த 'முன்னா', ஜுனியர் என்டிஆர் நடித்த 'பிருந்தாவனம்', ராம் சரண் நடித்த 'எவடு', கார்த்தி, நாகார்ஜுனா நடித்த 'ஊபிரி' - தமிழில் 'தோழா', மகேஷ்பாபு நடித்த 'மகரிஷி' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவரும் விஜய்யும் இணையும் படம் படமாக உருவாக உள்ளது.

நெல்சன் இயக்கும் படம் ஊரடங்கின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படம் முடிந்த பிறகு அடுத்த படமாக இது இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News