Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய படத்தின் வெற்றியால் 'குஷி'யான நடிகர் - அனைவரும் அசந்து போகும் வண்ணம் மக்களுக்கு ஒரு அறிவிப்பு!

விஜய் தேவரகொண்டாவின் குஷி திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதால் தன் சம்பாத்தியத்தில் இருந்து ஒரு கோடியை எடுத்து 100 குடும்பங்களுக்கு ஒரு லட்சம் வழங்க முடிவு செய்துள்ளார்.

புதிய படத்தின் வெற்றியால் குஷியான நடிகர் - அனைவரும் அசந்து போகும் வண்ணம் மக்களுக்கு ஒரு அறிவிப்பு!
X

KarthigaBy : Karthiga

  |  8 Sept 2023 1:00 PM IST

விஜய் தேவரகொண்டா, சமந்தா ஜோடியாக நடித்து தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்துள்ள குஷி படம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் விஜய் தேவரகொண்டா தனது சம்பாத்தியத்தில் இருந்து ஒரு கோடியை எடுத்து 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனை பலரும் பாராட்டு வருகிறார்கள் .இந்த நிலையில் ஏற்கனவே 2020ல் விஜய் தேவரகொண்டா நடித்து தெலுங்கில் வெளியாகி நஷ்டம் அடைந்த 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிக்சர்ஸ் நஷ்ட ஈடு கேட்டு போர்கொடி உயர்த்தி உள்ளார்.


அந்த நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் "உங்கள் படம் வெற்றி அடைந்ததால் ரசிகர்களுக்கு ஒரு கோடி கொடுப்பது நல்லது தான். ஆனால் உங்களது 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் ' படத்தினால் நாங்கள் எட்டு கோடி நஷ்டம் அடைந்தோம் . இதுகுறித்து யாரும் கண்டு கொள்ளவில்லை .தயவு செய்து எங்களுக்கும் தியேட்டர் அதிபர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் ஆதரவாக இருங்கள்' என்று கூறியுள்ளது. இதற்கு விஜய் தேவர கொண்டா ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News