Kathir News
Begin typing your search above and press return to search.

ஆஸ்கார் அகாடமி கவுரவத்தை தட்டி சென்ற நடிகர்!

ஜூனியர் என்.டி.ஆர் ஆஸ்கார் அகாடமியின் சார்பு அமைப்பான பிரபல அமைப்பு தனது புதிய குழுவில் இடம் பெற்றுள்ளார்.

ஆஸ்கார் அகாடமி கவுரவத்தை தட்டி சென்ற நடிகர்!

KarthigaBy : Karthiga

  |  21 Oct 2023 4:00 AM GMT

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்ததன் மூலம் உலக புகழ் பெற்றார். தற்போது ஜூனியர் என்.டி.ஆர் க்கு புதிய கௌரவம் கிடைத்திருக்கிறது. உலக அளவில் கலைத்துறையில் சேவை செய்தவர்களை கௌரவிக்கும் ஆஸ்கார அகாடமியின் சார்பாக மோஷன் பிக்சர்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் என்ற பிரபல அமைப்பு தனது புதிய உறுப்பினர் குழுவில் ஜூனியர் என்.டி.ஆர் பெயர் இடம் பெற்றுள்ளது.


இது குறித்து அகடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் அமைப்பு வெளியிட்ட செய்தி குறிப்பில் திரைத்துறையில் அர்ப்பணிப்பும் சேவையும் செய்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் கலைஞர்களை இதுபோல தேர்வு செய்து கௌரவிப்பது எங்களுக்கு பெருமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் - க்கு கிடைத்திருக்கும் இந்த புதிய கௌரவம் அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.


ஜூனியர் என்.டி.ஆர் தற்போது கோரட்டால சிவா இயக்கம் 'தேவரா' படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். சயீப் அலிகான் வில்லனாக நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் புதிய படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News