Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய திரை உலகில் அதிக வருமான வரி கட்டும் நடிகை அடேங்கப்பா! இவ்வளவா?என்று அசந்து நிற்கும் நெட்டிசன்கள்

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஆண்டுக்கு ரூபாய் 10 கோடி வருமான வரி செலுத்தி வரும் நடிகையாக தீபிகா படுகோனே முதலிடத்தில் உள்ளார்.

இந்திய திரை உலகில்  அதிக வருமான வரி கட்டும் நடிகை அடேங்கப்பா! இவ்வளவா?என்று அசந்து நிற்கும் நெட்டிசன்கள்
X

KarthigaBy : Karthiga

  |  19 July 2023 3:45 PM IST

இந்திய திரைஉலகில் சமீப காலமாக கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளும் போட்டி போட்டு சம்பாதிக்கிறார்கள். சினிமாவை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும் கோடி கோடியாக நடிகைகள் சம்பாதிக்கிறார்கள். இந்த நிலையில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோனே முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஏற்கனவே 2016 - 2017 வருவாய் ஆண்டில் ரூபாய் 10 கோடி வரி செலுத்தினார். கடந்த வருடமும் ரூபாய் 10 கோடி வரிசெலுத்தி அதிக வரி செலுத்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆண்டுக்கு தீபிகா படுகோனே வருவாய் நாற்பது கோடி . ஒரு படத்துக்கு ஒரு முறை 15 கோடி சம்பளம் வாங்குகிறார். விளம்பர தூதுவராக இருந்து ரூபாய் பத்து கோடி வசூல் செய்கிறார். 2019-ல் ரூபாய் 49 கோடி சம்பாதித்து இருந்தார் பத்மாவதி படத்தில் நடித்து ரூபாய் 12 கோடி வாங்கினார். அதே வருடம் ரஜினிகாந்த், அஜய் தேவ்கான், ரோஹித் சர்மா ஆகியோரை பின்னுக்கு தள்ளி அதிக வருவாய் ஈட்டிய டாப் 10 பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News