தனது குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் ஆரம்பித்த பாலிவுட் நடிகை.!
தனது குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் ஆரம்பித்த பாலிவுட் நடிகை.!
By : Kathir Webdesk
தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. மேலும், விக்ரம் நடித்த சாமுராய், சுக்ரன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக உள்ளார்.
இதனிடையே கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 9-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில், நடிகை அனிதா ஹசானந்தனி, தனது குழந்தை ஆரவ் ரெட்டி பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியுள்ளார். எதற்காக தொடங்கியுள்ளீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பும்போது, தனது மகன் பற்றி அனைத்து புகைப்படங்களையும் அதில் பதிவேற்றம் செய்ய உள்ளேன். ரசிகர்கள் அனைவரும் பார்த்து தெரிந்து கொள்வதற்காக என்று குறிப்பிட்டுள்ளார்.