Begin typing your search above and press return to search.
மற்றுமொரு இளம் பாடகர் மரணம் - வெளியான அதிர்ச்சி தகவல்
பாலிவுட்டில் மற்றுமொரு இளம் பாடகர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By :
பாலிவுட்டில் மற்றுமொரு இளம் பாடகர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலிவுட்டின் பிரபல பாடகர் கேகே மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக தற்போது 22 வயதான இளம் பாலிவுட் பாடகர் ஷீல் சாகர் திடீரென மரணமடைந்துள்ளார்.
கடும் காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் சில நாட்களுக்கு முன்பு அவர் மரணமடைந்து விட்டார் எனவும் அது பற்றி தகவல்கள் வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அவரது நண்பர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி மூலமாக இந்த தகவல்கள் வெளியானது. ஷீல் சாகர் ஹிந்தி மற்றும் மராட்டிய திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story