சூப்பர் ஸ்டாரை அடுத்து தனுஷை "தலைவா" என்று அழைத்த பிரபல நடிகை.!
சூப்பர் ஸ்டாரை அடுத்து தனுஷை "தலைவா" என்று அழைத்த பிரபல நடிகை.!
By : Amritha J
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தனுஷ் தற்போது தமிழ் மட்டுமில்லாமல் இந்தி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தனுஷை பாலிவுட் நடிகை தலைவா என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாகவே தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மட்டுமே இதுவரை தலைவா என அவரது ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் வழக்கம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
தற்போது தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தனுஷ் மற்றும் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சாரா அலிகான் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் தலைவா தனுஷுடன் ஜிம்மில் ஒரு பயிற்சி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த வீடியோவின் பின்னணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ படத்தில் இடம்பெற்ற ’மரணம் மாஸ்ஸூ மரணம்’ என்ற பாடலின் பின்னணி ஒலிக்கிறது .
மேலும் தனுஷ் ஏற்கனவே நடித்த பாலிவுட் திரைப்படமான ’ராஜண்ணா’ படத்தின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தான் இந்த படத்தையும் இயக்கி வருகிறார் என்றதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் தலைவா மாஸ் என்ற கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.