Kathir News
Begin typing your search above and press return to search.

'வாரிசு', தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - சூடு பிடிக்கிறது விஜய் பட வியாபாரம்

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

வாரிசு, தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - சூடு பிடிக்கிறது விஜய் பட வியாபாரம்

Karthik RavivarmaBy : Karthik Ravivarma

  |  26 Oct 2022 6:11 AM GMT

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.




வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். பொங்கலுக்கு ரிலீசாகிறது விஜய் நடிக்கும் வாரிசு!

வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமான அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் வியாபாரம் முழுவதும் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. இந்த திரைப்படத்தை தமிழகத்தில் மாஸ்டர் மற்றும் தளபதி 67 படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிடுகிறார். வாரிசு திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம், தொலைக்காட்சி உரிமம், வெளிநாட்டு விநியோகம், இந்தி டப்பிங் ரைட்ஸ் உள்ளிட்ட பல வியாபாரங்கள் ஏற்கனவே முடிவடைந்தன.




ஆனால் தமிழக வெளியீடு உரிமை இறுதியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளரான லலித் குமாருக்கு தில் ராஜு வழங்கியுள்ளார். இதற்கான ஒப்பந்தம் இரண்டு நாட்களுக்கு முன்னர் கையெழுத்தானது. அதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் அடுத்த வாரம் வெளியாகும் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News