Kathir News
Begin typing your search above and press return to search.

லாரன்ஸின் ருத்ரன் படம் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு

ருத்ரன் திரைப்படத்தில் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன்.

லாரன்ஸின் ருத்ரன் படம் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு

Mohan RajBy : Mohan Raj

  |  3 Jan 2023 11:12 AM GMT

ருத்ரன் திரைப்படத்தில் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும், ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள்.




முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், நாசர், பூர்ணிமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், கதை மற்றும் திரைக்கதையை இயக்குனர் கே.பி.திருமாறன் எழுதியுள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.




ஆக்ஷன் திரில்லரில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி ஆங்கில புத்தாண்டையொட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News