மாஸ்டர் வெற்றியடைய திருவண்ணாமலையில் வழிபாடு நடத்திய படக்குழு.!
மாஸ்டர் வெற்றியடைய திருவண்ணாமலையில் வழிபாடு நடத்திய படக்குழு.!
By : Kathir Webdesk
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் வெற்றியடைவதற்காக அப்படக்குழு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் மாஸ்டர் ஆகும். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தில் நட்சத்திர பட்டாளமே உள்ளது. இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படத்தின் டீஸரானது கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி வெளியிடப்பட்டது.
பட வெளியீடு நெருங்கிவரும் நேரத்தில் மாஸ்டர் படக்குழு சமீபத்தில் படத்தின் ப்ரோமா மற்றும் பாடல் காட்சிகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், மாஸ்டர் படம் வெற்றியடைய வேண்டும் என அப்படக்குழு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளது.
இது பற்றிய புகைப்படத்தை மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.