Kathir News
Begin typing your search above and press return to search.

அமிதாப்பச்சனுடன் நடிக்கும் படத்தில் கமல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அமிதாப்பச்சனுடன் நடிகர் கமலஹாசன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமிதாப்பச்சனுடன் நடிக்கும் படத்தில் கமல் சம்பளம் எவ்வளவு  தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  27 Jun 2023 2:45 PM GMT

கீர்த்தி சுரேஷ் நடிக்க மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான நடிகையர் திலகம் படத்தை இயக்கி பிரபலமான நாக் அஸ்வின் புதிதாக டைரக்டர் செய்ய உள்ள படத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ் உடன் இணைந்து கமலஹாசன் நடிக்க உள்ளார்.


இதுகுறித்து படக்குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில், நடிகர் கமலஹாசன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ராஜெக்ட் கே படத்தில் இணைந்துள்ளார் .நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். கமலஹாசன் வருகையால் இந்த படம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கமலஹாசன் நடிப்பின் நாட்டம் மொழிகளைக் கடந்த அனைத்து வகை பார்வையாளர்களையும் மகிழ்வித்துள்ளது.


நடிப்பில் அவருக்குள்ள பரந்த அனுபவமும் பன்முக திறமையில் இருக்கும் நிபுணத்துவமும் ப்ராஜெக்ட் கே படத்துக்கு மிகுந்த ஆதரவை வழங்கும். 20 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்கும் கமலஹாசன் ரூபாய் 150 கோடி சம்பளமாக பெற உள்ளார். ப்ராஜெக்ட் கே படம் அறிவியல், தொழில்நுட்பம் , ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைகளை கொண்டு உருவாகிறது.


புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி புரொடக்ஷன்ஸ் மற்றும் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் இந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த தயாராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் , கன்னடம் மொழிகளில் பான் இந்தியா படமாக இது உருவாகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News