பிக்பாஸ் ரன்னர் பட்டம் வென்ற பாலாஜியின் முதல் வீடியோ பதிவு.!
பிக்பாஸ் ரன்னர் பட்டம் வென்ற பாலாஜியின் முதல் வீடியோ பதிவு.!
By : Amritha J
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி 106நாட்களுக்கு பிறகு முடிக்கப்பட்டது. அதில் 16 போட்டியாளர்களும் வெவ்வேறு கோணங்களில் விளையாடினார்கள். அதில் கடைசி 5 போட்டியாளர்களாக ஆரி, பாலா, ரியோ, சோம், ரம்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.அதில் பாலா ரன்னர் ஆகவும், ஆரி பிக்பாஸ் சீசன் 4 வெற்றியாளர் என்ற பட்டத்தையும்,50 லட்சமும் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்போட்டியில் பாலா மற்றும் ஆரி இருவரும் அடிக்கடி சண்டையும்,கோபப்பட்டும் விளையாடி வந்தனர்.அந்த வகையில் ஆரி அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி கோபப்படாமல் விளையாடினார். ஆனால் பாலாஜி அவரது கோபத்தை முற்றிலுமாக வெளிப்படுத்தி அனைவரையும் கோபப்படுத்தி சர்ச்சைக்குரியவர் என்று பெயர் எடுத்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு வார காலங்கள் ஆன நிலையில் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஆரி உள்பட அனைவரும் அவர்களது வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.எனவே சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மூலம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில் தற்போது பாலாஜி அவரது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: உங்கள் அன்புக்கும் உங்கள் ஓட்டுக்கு ரொம்ப நன்றி. லைவ் வரவேண்டும் என்று பலர் கேட்டீர்கள். ஆனால் என்னால் லைவ் வரமுடியவில்லை. அதனால் இந்த சின்ன வீடியோவை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் நான் அன்பு செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.இதற்கு பாலாஜியின் ரசிகர்கள் அனைவரும் அவர்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
— Balaji Murugadoss (@OfficialBalaji) January 22, 2021