மாஸ்டர் படத்தின் ஒரு வருட புகைப்படம் என்ற பெயரில் வைரலாகும் ஹேஷ்டேக்!
மாஸ்டர் படத்தின் ஒரு வருட புகைப்படம் என்ற பெயரில் வைரலாகும் ஹேஷ்டேக்!
By : Amritha J
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் தின விருந்தாக தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் பல நல்ல கமெண்ட்களையும், விமர்சனங்களையும் பெற்று வரும் நிலையில் வெளியான 10 நாட்களில் 200 கோடிக்கு மேலும் வசூல் சாதனையை படைத்தது.
அந்த வகையில் திடீரென மாஸ்டர் படத்தின் ஒரு வருட ஹேஷ்டேக் ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது அவரைக் காண்பதற்காக கூடியிருந்த ரசிகர்கள் முன் செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்தார்.இந்த புகைப்படம் அவரது டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டவுடன் மிகப்பெரிய அளவில் வைரலானது.
எனவே ரசிகர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படம் இன்றுடன் ஒரு வருடம் ஆன நிலையில் #1YearOfMasterSelfie என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் அப்போது எடுத்த வீடியோவும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
GOOSEBUMPS EVERY TIME 🔥🔥#1YearOfMasterSelfie #Master @actorvijay pic.twitter.com/7oVXWf6vA1
— Vijay Fans Trends (@VijayFansTrends) February 9, 2021