ரசிகர்களின் அமோக வரவேற்பால் மீண்டும் திரையரங்குகளில் 'தி காஷ்மீர் பைல்ஸ்'
விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் காஷ்மீர் பைல்ஸ் இந்தியில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
By : Mohan Raj
விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் காஷ்மீர் பைல்ஸ் இந்தியில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அதாவது காஷ்மீரில் 90களில் காலகட்டத்தில் இந்து பண்டிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களையும் அதனால் பாதிக்கப்பட்ட பண்டிதர்கள் அண்டை மாநிலங்களுக்கு காஷ்மீரை விட்டு வெளியேறி இடம் பெயர்ந்ததை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
அதனாலயே பாலிவுட்டையும் தாண்டி மற்ற மொழி திரையுலகிலும் காஷ்மீர் பைல்ஸ் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இன்று இந்த படம் தியேட்டர்களில் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி கடந்த 1990இல் காஷ்மீரில் கிட்டத்தட்ட 32 காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதன் நினைவு தினமான இன்று இந்த படத்தை மீண்டும் வெளியிடுவது சரியானதாக இருக்கும் என்பதாலேயே இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ததாக கூறியுள்ளார்.
மேலும் அவர் ஒரு படம் வெளியான ஒரு வருடத்திற்குள்ளேயே இரண்டாவது முறையாக ரிலீஸ் செய்யப்படும் சாதனையை காஷ்மீர் பெற்றுள்ளது என்பதையும் மற்றும் இந்த படத்தை தியேட்டரில் பார்க்காமல் மிஸ் பண்ணியவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.