கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படும் 'தி லெஜெண்ட்' பர்ஸ்ட் லுக்
75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் லெஜெண்ட் சரவணனின் புதிய படம் 'தி லெஜெண்ட்' ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் லெஜெண்ட் சரவணனின் புதிய படம் 'தி லெஜெண்ட்' ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லெஜெண்ட் சரவணன் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். 'தி லெஜெண்ட்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரேவுட்டேளா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என 5 மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் 'தி லெஜெண்ட்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்பட விழாவிற்கு செல்வதற்குமுன் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஊர்வசி தமிழில் அறிமுகமாக இருப்பது மகிழ்ச்சி என்றார். இதன் படத்தில் இரண்டாவது பாடலில் வருகிற மே 20ல் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.