சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு, ரசிகர்கள் மகிழ்ச்சி..!
சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு, ரசிகர்கள் மகிழ்ச்சி..!
By : Amritha J
தமிழ் சினிமாவில் சிறு படங்கள் நடித்து முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளிவந்த படம் கனா மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் டாக்டர் மற்றும் அயலான் என இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் புரோடக்சன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அயலான் படத்தின் அப்டேட் ஒன்று படக்குழுவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது. 'அயலான்' படத்தின் 'முதல் சிங்கிள் பாடல்' பிப்ரவரி 17-ஆம் தேதி, நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நேற்று இன்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.