தென்னிந்தியாவின் தாய் பள்ளத்தில் விழுந்து விட்டது.. நடிகர் கருணாஸ் என்ன சொல்கிறார்.!
தென்னிந்தியாவின் தாய் பள்ளத்தில் விழுந்து விட்டது.. நடிகர் கருணாஸ் என்ன சொல்கிறார்.!
By : Kathir Webdesk
தென்னிந்தியாவின் தாயான தமிழ் சினிமா தற்போது பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் வரும். அப்படி தேர்தல் வரும்பொழுது தங்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்று நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வாக்களிப்பார்கள். அப்படி வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்பதில்லை என்பது சக நடிகர்களின் குரலாக உள்ளது. அதே போன்று தயாரிப்பாளர்களின் நிலைமையும் அப்படிதான் உள்ளது.
இந்நிலையில், இது பற்றி நடிகர் கருணாஸ் கூறியதாவது: ‘‘தழிம் சினிமாவை மீட்கும் பொறுப்பு வெற்றி பெறவுள்ள நிர்வாகிகளுக்கு உள்ளது. நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை இயக்குநர் பாரதிராஜா தொடங்கியது சரியான நடவடிக்கை கிடையாது. தவறு நடக்கும் போது அதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பில் இருந்து தப்பும் முயற்சியாகத்தான் இதை பார்க்க முடியும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இன்று தான் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.