Kathir News
Begin typing your search above and press return to search.

சிம்பு படத்திற்கு வந்த சிக்கல் - பாம்பை கொடுமைப்படுத்தியதாக புகார்.!

சிம்பு படத்திற்கு வந்த சிக்கல் - பாம்பை கொடுமைப்படுத்தியதாக புகார்.!

Amritha AmrithaBy : Amritha Amritha

  |  5 Nov 2020 10:44 PM IST

நடிகர் சிம்பு சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமா துறையில் களம் இறங்கி இருக்கிறார். இவர் நடிக்கும் படங்கள் இவருக்கு சில சர்ச்சைகளை ஏற்படுத்தி தான் வருகின்றன. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "ஈஸ்வரன்". இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதில், சிம்பு அவரது தோளின் மீது பாம்பை வைத்துப் பிடித்துக் கொண்டு நிற்பதுபோல் இருந்தது, சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது. இதனையடுத்து சிம்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டிருந்தார்.

படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,அதில் உயிருள்ள பாம்பை மரத்திலிருந்து பிடித்து சாக்குப் பையில் போடுவது போன்ற ஒரு காட்சி உள்ளதால் தற்போது சிக்கல் உருவாகியுள்ளது. வன உயிரினப் பாதுக்காப்புச் சட்டத்தின் கீழ் பாதுக்காக்க வேண்டிய உயிரினங்களில் இந்தியாவில் உள்ள அனைத்துப் பாம்புகளும் உள்ளது என்று சிம்பு பிடித்துள்ள பாம்பு உயிரினப் பாம்பு சட்டத்தின் பட்டியல் 2-ல் இடம்பெற்றுள்ளதால் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ந் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினமான பாம்பை இப்படி செய்வது குற்றம் என்று சிம்பு மீது வன உயிரின ஆர்வலர்கள் புகாரளிக்கவுள்ளனர்.

இதையடுத்து படக்குழுவினர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பரவிய புகைப்படத்தை பார்த்து சிம்பு பாம்பை கொடுமைப்படுத்தினாரா என்ற கேள்வியும் உலவி வருகிறது. மேலும் இந்தப் பிரச்சனைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்குமா என்று காத்திருந்து பார்ப்போம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News