தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு வந்த பிரச்சனை.!
தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு வந்த பிரச்சனை.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்போது தனுஷ் நடித்து கொண்டிருக்கும் படம் கர்ணன். பாதி சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் வகையில் கர்ணன் திரைப்படத்திற்கு புதிதாக ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. இப்படத்தை மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். லால், ரஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்
இந்நிலையில் தற்போது கர்ணன் படத்தின் தலைப்புக்கு புதிதாக ஒரு பிரச்சனை வந்துள்ளது. நடிகர் சிவாஜியின் சமூக நலப்பேரவை சார்பில் இன்று வெளியான அறிக்கையில் கூறியதாவது: தனுஷ் தற்போது “கர்ணன்“ என்ற தலைப்பிலான திரைப்படத்தில் நடித்துவருவதாக அறிகிறோம் என்றும் நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் லட்சோபலட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் "கர்ணன்" என்றாலே நினைவில் நிற்பது நடிகர்திலகத்தின் "கர்ணன்" திரைப்படம்தான்.
ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும், நியாயப்படி, மனசாட்சிப்படி. சில திரைப்படங்களின் பெயர்கள் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில். அந்தப் பெயர்களே திரைப்படத்தின் கதைக்களத்தைத் தாங்கி கால காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும்.

அதுபோலவே ஆண்டவன் கட்டளை, ராஜா, பச்சை விளக்கு என்று நடிகர்திலகம் நடித்த படங்களின் பெயரிலேயே மீண்டும் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதுபோன்ற சமூகப்படங்களின் பெயர்களை மீண்டும் வைப்பதற்கு யாரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்போவதில்லை.
ஆனால், சரஸ்வதி சபதம். திருவிளையாடல். கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற குறிப்பிட்ட தலைப்புகள் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடாது. ஏனெனில் அந்தத் திரைப்படத் தலைப்பின் தனித்துவம் அப்படி என்று கூறியுள்ளனர்.இதை தொடர்ந்து, அடுத்ததாக கர்ணன் படக்குழுவிடம் இருந்து இதற்கு என்ன விளக்கம் வர போகிறது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பார்க்க தொடங்கியுள்ளனர்.