ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஹாலிவுட் நடிகையின் கதாபாத்திரம்!
ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஹாலிவுட் நடிகையின் கதாபாத்திரம்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ராஜமவுலி. எனவே இவர் இயக்கிய பாகுபலி படம் மிகப்பெரிய வசூலையும் அதிக ரசிகர்களையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஹாலிவுட் நடிகை கதாபாத்திரம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.மேலும் இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்தப் படத்தில் அஜய் தேவ்கான், ஆலியாபட், ஸ்ரேயா உள்பட பல இந்திய நட்சத்திரங்களும், ஒரு சில ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள்.

எனவே இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹாலிவுட் நடிகை ஒலிவா மோரிஸ் அவர்களின் கேரக்டர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஜெனிபர் என்ற கேரக்டரில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டதோடு இவருடைய கேரக்டர் குறித்த புகைப்படம் ஒன்றினையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படம் அக்டோபர் 13-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Presenting @OliviaMorris891 as #Jennifer...:) #RRRMovie #RRR pic.twitter.com/vwvylY7ilc
— rajamouli ss (@ssrajamouli) January 29, 2021