Kathir News
Begin typing your search above and press return to search.

தன் அழகின் ரகசியம் 12 மணி நேரம் பட்டினி- நடிகை பகிர்ந்த வியப்பான தகவல்

12 மணி நேரம் பட்டினி கிடப்பதனால் தான் தன் தேகம் இவ்வளவு பொலிவுடன் அழகுடனும் திகழ்வதாக நடிகை தமன்னா வெளியிட்டுள்ளார்.

தன் அழகின் ரகசியம் 12 மணி நேரம் பட்டினி- நடிகை பகிர்ந்த வியப்பான தகவல்
X

KarthigaBy : Karthiga

  |  26 Aug 2023 5:15 PM IST

தமிழ் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்தில் 'காவாலய்யா' பாடலுக்கு தமன்னா ஆடிக் கொண்டிருக்கும் நடனம் பட்டி தொடடி எங்கும் கலக்கி வருகிறது. சினிமாவுக்கு வந்து 18 வருடங்களாகியும் இன்னும் இளமையாகவே இருப்பதாக ரசிகர்கள் வியக்கிறார்கள.


இந்நிலையில் தனது இளமை ரகசியம் குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில் பிட்னஸ் உடன் இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ உணவு பழக்க வழக்கங்களும் அவ்வளவு முக்கியம். காலை சிற்றுண்டியாக நட்ஸ், பேரிச்சம்பழம், செர்ரீஸ், வாழைப்பழத்தை சம பங்காக எடுத்துக்கொண்டு சாப்பிடுவேன். மதிய உணவில் பிரவுன் ரைஸ், பருப்பு, காய்கறிகள் இருக்கும் .


தினமும் மாலை ஐந்து முப்பது மணிக்கு எல்லாம் சாப்பிட்டுவிட்டு மறுநாள் காலை 6 மணி வரை எதுவுமே சாப்பிட மாட்டேன். தினமும் இப்படி 12 மணி நேரம் பட்டினியாக இருக்கிறேன். இதனால் சருமம் அழகாக பளிச்சென்று இருக்கும். கிரீன் டீ, ஆம்லா ஜூஸ் போன்றவையும் எனது ஆரோக்கிய ரகசியத்தில் ஒரு பங்காக இருக்கிறது என்றார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News