Kathir News
Begin typing your search above and press return to search.

புத்தாண்டிற்கு ஏமாற்றாமல் ரசிகர்களுக்கு தரிசனம் தந்த சூப்பர் ஸ்டார்

2023ம் ஆண்டின் ஆங்கிலப்புத்தாண்டான நேற்று தமிழகம் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது

புத்தாண்டிற்கு ஏமாற்றாமல் ரசிகர்களுக்கு தரிசனம் தந்த சூப்பர் ஸ்டார்

Mohan RajBy : Mohan Raj

  |  2 Jan 2023 7:52 AM GMT

2023ம் ஆண்டின் ஆங்கிலப்புத்தாண்டான நேற்று தமிழகம் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது. பொதுவாக புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளில் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டன் இல்லாம்முன்பு அதிகளவில் கூடுவார்கள். ரஜினிகாந்த் சென்னையில் இருந்தால் ரசிகர்களை சந்தித்து வாழ்த்துக்கள் கூறுவார்.




அதே போன்று இந்த ஆண்டும் ரசிகர்கள் ரஜினியின் இல்லம் முன்பு காலையிலேயே கூடி இருந்தனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரஜினியின் இல்லம் வாழை மரம் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.




காலை 9 மணியளவில் ரஜினிகாந்த் தன் வீட்டின் முகப்பிற்கு வந்து கூடியிருந்த ரசிகர்களை பார்த்து வலதுகையசைத்து வணக்கம் வைத்து புத்தாண்டு வாழ்த்தை கூறி ரசிகர்களை மகிழ்வித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News