அர்ச்சனாவை நாமினேஷனிலிருந்து காப்பாற்ற பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கா.?
அர்ச்சனாவை நாமினேஷனிலிருந்து காப்பாற்ற பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கா.?
By : Amritha J
பிக்பாஸ்ஸின் நேற்றைய நிகழ்ச்சியில் ஆரி, அர்ச்சனா, ரியோ, சோம், அனிதா, அஜித், சிவானி ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் புதிய டாஸ்க்கில் போட்டியாளர் இரு அணிகளாக கோழி மற்றும் நரியாக மாறுகின்றனர்.
இந்த டாஸ்க்கின் படி கோழிகள் தங்களுடைய தங்க முட்டைகளை நரிகளின் கை படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் முட்டைகளை தொட வரும் நரியின் வாலை கோழிகள் பிடித்து விட்டால் அந்த நரி அந்த சுற்றில் இருந்து வெளியேறி விடும் என்றும், முட்டைகளை தொடுவது, வாலை பிடிப்பது ஆகியவற்றுக்கு பிக்பாஸ் கரன்ஸி கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த டாஸ்கில் எந்த நபரிடம் அதிக பிக்பாஸ் கரன்சி உள்ளதோ அந்த நபருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் என இந்த டாஸ்க்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்க்கில் ஸ்பெஷல் பவர் கிடைக்கும் நபர் தன்னை நாமினேஷன் இருந்து விடுவித்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் டாஸ்க்கில் அர்ச்சனா அல்லது ரியோ அந்த ஸ்பெஷல் பவரை பெற்று நாமினேஷனில் இருந்து இருவரில் ஒருவர் இந்த வாரம் தப்பித்து விடுவார்களா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர். இந்த டாஸ்கில் இரண்டு அணிகள் உள்ளதால் பிரச்சினைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Day72 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/8oYSoLt59k
— Vijay Television (@vijaytelevision) December 15, 2020