டான்ஸ்'னா அது ஜூனியர் என்.டி.ஆர்'தான் - புகழ்ந்து தள்ளும் நடன இயக்குனர்
ஜூனியர் என்.டி.ஆர் நடன காட்சிகள் படப்பிடிப்பில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து உள்ளனர் தெலுகு திரை உலகத்தினர்.

ஜூனியர் என்.டி.ஆர் நடன காட்சிகள் படப்பிடிப்பில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து உள்ளனர் தெலுகு திரை உலகத்தினர்.
சிறப்பாக திறமையாக நடனமாடும் ஒரு சில நடிகர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர் ஜூனியர் என்.டி.ஆர், அவர் மிக வேகமாகவும் அதே நேரத்தில் சிரமங்கள் உடன் கூடிய நடன அசைவுகளை கேமரா முன் ஆடுவதில் வல்லமை வாய்ந்தவர். இந்த நிலையில் சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர்.படத்தில் நாட்டுக்கூத்து பாடலுக்காக ஜூனியர் என்.டி.ஆர் ஆடிய நடனம் ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்தது.
இதுகுறித்து தெலுங்கு திரை உலகில் முன்னணி நடன இயக்குனரான சேகர் மாஸ்டர் என்பவர் கூறும்போது, 'ரிகர்சல் எதுவும் செய்யாமல் நேரடியாக டேக் செல்லும் நடிகர் யார் என்றால் அது ஜூனியர் என்.டி.ஆர்'தான், நான் சொல்லிக் கொடுக்கும் அசைவுகளை பார்த்து கொண்டு அப்படியே மனதில் உள்வாங்கிக் நேரடியாக டேக்கில் ஆடி விடுவார் அப்பேர்ப்பட்ட திறமை வாய்ந்தவர்' எனக் கூறி மிகவும் பாராட்டி உள்ளார்.