Kathir News
Begin typing your search above and press return to search.

சூப்பர் ஸ்டாரின் 170 வது படத்தில் இணைய இருக்கும் மூன்று நாயகிகள்!

ரஜினியின் 170 வதுபடத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூப்பர் ஸ்டாரின் 170 வது படத்தில் இணைய இருக்கும் மூன்று நாயகிகள்!
X

KarthigaBy : Karthiga

  |  4 Oct 2023 11:30 PM IST

ரஜினிகாந்த் 170-வது படத்தில் நடிக்க உள்ளார். திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தை சூர்யாவின் ஜெய் பீம் படத்தை இயக்கிய பிரபலமான ஞானவேல் டைரக்டர் செய்கிறார். இதில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் போலி என்கவுண்டர் கதை என்றும் கூறப்படுகிறது.


இந்த படத்தில் மஞ்சுவாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் தனுசுடன் அசுரன், அஜித்துடன் துணிவு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ரித்திகா சிங் இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை ஆகிய படங்களிலும் துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரை, அநீதி, நட்சத்திர நகர்கிறது படங்களிலும் நடித்துள்ளார். ரஜினியுடன் நடிப்பது மூலம் ஆசீர்வதீங்ப்பதாக உணர்கிறேன் என்று துஷாரா விஜயனும் ரஜினியுடன் நடித்த கிடைத்த வாய்ப்புக்கு நன்றி உள்ளவளாக இருப்பேன் என்று ரித்திகா சிங்கும் கூறியுள்ளனர்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News