நான் காக்கிறதுக்காக வந்திருக்கிற ‘ஈஸ்வரன்’ டா.. சிம்பு படத்தின் ட்ரைலர் வெளியீடு.!
நான் காக்கிறதுக்காக வந்திருக்கிற ‘ஈஸ்வரன்’ டா.. சிம்பு படத்தின் ட்ரைலர் வெளியீடு.!
By : Kathir Webdesk
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், நந்திதா, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படம் பொங்கல் அன்று வெளியாகும் நிலையில் தற்போது ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்குப் பின்னர் சிம்பு நடித்து முடித்துள்ள படம் ஈஸ்வரன். இப்படத்தில் சிம்பு 101 கிலோவிலிருந்து 71 கிலோவாக எடை குறைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். ஏற்கெனவே, மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், மாஸ்டருடன் ஈஸ்வன் படமும் வெளியாகிறது என்பதை சிம்பு உறுதி செய்தார்.
இந்நிலையில், இன்று 5:04 மணிக்கு ஈஸ்வரன் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப்படம் முழுவதும் கிராமப்புறத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என கூறப்படுகிறது. அந்த ட்ரைலரில், நீ அழிக்கிறதுக்காக வந்த ’அசுரன்’ன்னா, நான் காக்கிறதுக்காக வந்திருக்க ’ஈஸ்வரன்’டா என்று டயலாக் பேசியுள்ளார்.
இந்த டயலாக் தனுஷ் ரசிகர்களை வம்பு இழுக்கும் விதமாக அமைந்துள்ளது. அவர் நடித்துள்ள அசுரன் படத்தின் பெயரை சிம்பு உச்சரிக்கிறார். இதனால் தனுஷ் மற்றும் சிம்பு ரசிகர்களிடையே வார்த்தை போர் ஆரம்பிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.