Kathir News
Begin typing your search above and press return to search.

சோனு சூட் ஆரம்பித்து வைத்த நலத்திட்டம் - நன்றி கூறும் பொதுமக்கள்!

சோனு சூட் ஆரம்பித்து வைத்த நலத்திட்டம் - நன்றி கூறும் பொதுமக்கள்!

சோனு சூட் ஆரம்பித்து வைத்த நலத்திட்டம் - நன்றி கூறும் பொதுமக்கள்!
X

Amritha JBy : Amritha J

  |  19 Jan 2021 6:00 PM GMT

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் சோனுசூட். இவர் சினிமாவில் வில்லனாக இருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அந்த வகையில் கொரோனா காலகட்டங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருந்தபோது, போக்குவரத்து எதுவும் இன்றி புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

அப்போது நடிகர் சோனு சூட், தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

வேலையிழந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.மேலும் விவசாயம் புரிய வசதியின்றி சொந்த மகள்களை வைத்தே நிலத்தை உழுத விவசாயிக்கு டிராக்டர் ஒன்றை அனுப்பி வைத்தார். செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாமல் இருந்த ஏழை மாணவர்களுக்கு செல்போன்களை வாங்கி அனுப்பி வைத்தார்.

நெட்வொர்க் வசதி இல்லாமல் இருந்த ஒரு மலைக் கிராமத்திற்கு சொந்தமாக ஒரு செல்போன் டவரையே உருவாக்கி கொடுத்தார். இவர் மக்களுக்கு செய்த உதவிகளை சொல்ல வார்த்தையே இல்லை. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிராம மக்கள் சோனு சூட் அவர்களுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தார்கள் என்பதும் தெரிந்ததே. தற்போது மேலும் ஒரு புதிய பொது சேவையை சோனுசூட் தொடங்கியுள்ளார்.


சோனுசூட் ஆம்புலன்ஸ் சர்வீஸ் என்ற ஒரு ஆம்புலன்ஸ் சேவையை அவர் துவக்கி வைத்துள்ளார். இந்த ஆம்புலன்ஸ் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆம்புலன்சில் அனைத்து வகையான வசதிகளும் உள்ளன என்பதும் அதி நவீன வசதிகள் கொண்ட இந்த ஆம்புலன்ஸ் சேவை ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இருமாநில மக்களுக்கும் மிகப்பெரிய வகையில் உதவும் என்றும் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News