தீபாவளிக்கு திரையரங்குகள் திறக்கப்படும்.. உரிமையாளர் சங்கம் அறிவிப்பு.!
தீபாவளிக்கு திரையரங்குகள் திறக்கப்படும்.. உரிமையாளர் சங்கம் அறிவிப்பு.!
By : Kathir Webdesk
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. இதனால் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை தளர்த்தி வருகிறது.
இந்நிலையில், தீபாவளிக்கு அனைத்து தியேட்டர்களும் திறக்கப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் 7 மாதங்களுக்கு பிறகு 50 இருக்கைகளுடன் இயக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்தது.
புதிய படங்கள் வெளியாகாததால் ஏற்கனவே வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் திரையிடப்பட்டன. ஆனால் கொரோனா அச்சத்தாலும் பழைய படங்களை திரையிட்டதாலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. பார்வையாளர்கள் வராததால் 800 தியேட்டர்களை திறக்காமல் மூடியே வைத்துள்ளனர். இதனால் தியேட்டர் அதிபர்களுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வி.பி.எப் கட்டண பிரச்சினையில் தற்காலிக தீர்வு ஏற்பட்டு தீபாவளி அன்று புதிய படங்களை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.