நடிகர் ரஜினி அரசியலை விட்டு விலக இதுதான் காரணம்.!
நடிகர் ரஜினி அரசியலை விட்டு விலக இதுதான் காரணம்.!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது அரசியலை விட்டு விலகுவதாக அறிவிப்பு வெளியிட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினியின் மக்கள் மன்றமும் போட்டியிடும் என்று தமிழக மக்கள் காத்திருந்தனர். இந்த மாதம் 31ம் தேதி கட்சி பற்றி முறைப்படி அறிவிப்பு வெளியாகும் மற்றும் அதற்கான பணிகளை துவங்கி விட்டேன் என கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தியாளர் சந்திப்பில் ரஜினி கூறியிருந்தார்.
இதன் பின்னர் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக கடந்த வாரம் ஐதராபாத் சென்றிருந்தார். படப்பிடிப்பு தொடங்கிய அடுத்த நாளே படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். இதனை தொடர்ந்து 27ம் தேதி இரவு சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். ரஜினியிடம் அவரது மகள் சவுந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா உள்ளிட்டோரும் கட்சியை ஆரம்பிக்க வேண்டாம். உங்கள் உடல் நலம்தான் தற்போதைக்கு முக்கியம் என கூறியிருந்தனர்.
இதனை முழுவதும் கேட்டுக்கொண்ட ரஜினி மற்றும் தனது நிர்வாகிகளின் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டுதான் இந்த அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், கொரோனா எனக்கு ஆண்டவன் கொடுத்த சோதனையாக கருதுகிறேன். என்னை வாழ வைக்கும் தமிழ் சொந்தங்களுக்காக என்றுமே போராடுவேன் என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.