சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்கும் மூன்று தலைமுறை நடிகர்கள்!
சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்கும் மூன்று தலைமுறை நடிகர்கள்!

நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் மூன்று தலைமுறை பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்தவகையில் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் அருண்விஜய்யின் மகன் ஆரவ் நடித்து வருகிறார் என்றும், சிறப்பு தோற்றத்தில் அருண் விஜய் நடிப்பதாகவும், படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி பிரபல நடிகர் விஜயகுமாரும் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.மேலும் இந்த ஷூட்டிங் நடைபெற்ற போது எடுத்த புகைப்படத்தை அருண்விஜய் அவரது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை இயக்குனர் சரவ் சண்முகம் இயக்கி வரும் நிலையில் ஒரு படத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் நடிக்க இருப்பதை பற்றி அவர் கூறியது: ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறை நடிகர்கள் எங்கள் படத்தில் இணைவது பெருமையாக இருக்கிறது என்றும், குறிப்பாக அருண்விஜய் மற்றும் விஜயகுமார் ஆகியோர்களுக்கு கதை சொல்வது எளிதில்லை என்றும், அவர்களது கதாபாத்திரம் குறித்தும் அதற்குரிய முக்கியத்துவம் குறித்தும் விளக்கி அவர்களை நடிக்க சம்மதிக்க வைத்ததாகவும் அவர் கூறினார்.
We are happy to have shared this beautiful journey!! @arunvijayno1 https://t.co/KLybzoJ0vW
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) February 7, 2021