மதமாற்றும் கும்பலின் தடையை உடைத்து இன்று திரைக்கு வந்த ருத்ரதாண்டவம்!
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனரான ரிச்சர்டு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ருத்ரதாண்டவம். இப்படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய ஆதரவையும், எதிர்ப்பையும் சம்பாதித்தது என்றே சொல்லலாம்.
By : Thangavelu
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனரான ரிச்சர்டு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ருத்ரதாண்டவம். இப்படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய ஆதரவையும், எதிர்ப்பையும் சம்பாதித்தது என்றே சொல்லலாம்.
இப்படத்தின் மையக்காட்சிகள், மதமாற்றும் கும்பல் மற்றும் போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தோலுரித்து காட்டப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தடை டிரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக் காட்சிகளை வைத்து தடைகேட்டு மதமாற்றும் கும்பல் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியது. அதன்படி ருத்ர தாண்டவம் படத்திற்கு தடைகோரிய வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரித்தது. சார் யேசுதாஸ் என்பவர் இப்படத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி, படத்தின் டிரைலர் மட்டும் வெளிவந்துள்ளதாகவும், முழு படத்தையும் பார்க்காமல் யூகத்தின் அடிப்படையில் மனுதாரரின் கருத்து இருப்பதாக கூறினார். மேலும், திரைப்படம் வெளியாகவுள்ள கடைசி நிமிடத்தில் மனுதாக்கல் செய்திருப்பதால் ருத்ர தாண்டவத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 1) உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் படம் திரையிடப்படுகிறது. தடையை உடைத்ததில் மிகப்பெரிய பங்கு பாமக வழக்கறிஞர் பாலுவை சேரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதற்காக மோகன் ஜி, தனது முகநூல் பக்கத்தில் அனைத்திற்கும் பக்க பலமாக இருந்தவர்களுக்கு நன்றி எனவும், பாமக வழக்கறிஞர் குழுவிடம் புகைப்படம் எடுத்துள்ளார். அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Mohan G