Kathir News
Begin typing your search above and press return to search.

நாளை பிரமாண்ட விழாவில் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் "பிரின்ஸ்" திரைப்படத்தின் டிரெய்லர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் தீபாவளிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படம் "பிரின்ஸ்"

நாளை பிரமாண்ட விழாவில் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர்

Karthik RavivarmaBy : Karthik Ravivarma

  |  8 Oct 2022 8:16 AM GMT

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் தீபாவளிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படம் "பிரின்ஸ்"

இந்த திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், நாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா நடிக்கிறார், தமன் இசையில் தெலுங்கு இயக்குனர் அனு உதீப் இயக்குகிறார்.

தீபாவளிக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் இதுவரை "பிரின்ஸ்" திரைப்படத்தின் டீசர், டிரெய்லர் எதுவும் வெளியிடப்படவில்லை.




தற்போது அதுபற்றிய தகவல் கிடைத்துள்ளது. "பிரின்ஸ்" திரைப்படத்திற்கு டீஸர் கிடையாது எனவும், டிரெய்லர் மட்டுமே வெளியாகும் என தெரிகிறது.




நாளை மாலை சென்னை ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறவிருக்கும் பிரின்ஸ் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இந்த டிரெய்லர் பிரத்யேகமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர் அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகும்.

இதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் அடுத்த பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News