Kathir News
Begin typing your search above and press return to search.

ரசிகர்களுக்கு 'ட்ரீட்' - இரு கனவுக்கன்னிகள் இணைந்து நடிக்கும் 'டெஸ்ட்' திரைப்படம் - அதில் ஒருவருக்கு வில்லி வேடம்

நயன்தாராவும் மீரா ஜாஸ்மினும் இணைந்து நடிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ரசிகர்களுக்கு ட்ரீட் - இரு கனவுக்கன்னிகள் இணைந்து நடிக்கும் டெஸ்ட் திரைப்படம் - அதில் ஒருவருக்கு வில்லி வேடம்

KarthigaBy : Karthiga

  |  12 May 2023 10:30 AM GMT

நயன்தாரா தற்போது டெஸ்ட் என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார் . கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை அம்சத்தில் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. இதில் மாதவன் , சித்தார்த் ஆகியோரும் நடிக்கின்றனர் .சஷிகாந்த் டைரக்ட் செய்கிறார். சென்னை, பெங்களூர் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர் .இந்தப் படம் மூலம் பிரபல சினிமா பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.


இந்த நிலையில் டெஸ்ட் படத்தில் நயன்தாராவுடன் மீரா ஜாஸ்மின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர். மீரா ஜாஸ்மின் ஏற்கனவே தமிழில் ரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். புதிய கீதை, ஆஞ்சநேயா, கஸ்தூரிமான், சண்டக்கோழி, மெர்குரி பூக்கள், திருமகன் , நேபாளி, பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.


கடைசியாக 2014 இல் வெளியான விஞ்ஞானி படத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு 9 வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை . நீண்ட இடைவெளிக்கு பிறகு நயன்தாரா படம் மீண்டும் நடிக்க வந்திருப்பதாக கூறப்படுகிறது .அவர் ஏற்று நடிப்பது வில்லி வேடம் என்பது கூடுதல் தகவல்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News