திருமணத்தை அடுத்து பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய துல்கர் சல்மான் பட நடிகை!
திருமணத்தை அடுத்து பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய துல்கர் சல்மான் பட நடிகை!

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கினார்.மேலும் இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே பாராட்டியதோடு எனக்கு ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் என்று கூறினார் என்ற அலைபேசி பதிவுகளும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நாயகி நிரஞ்சனி அகத்தியன், இப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை காதலித்த நிலையில் இருவரும் திருமணம் செய்யப்போவதாகவும், இவர்களது திருமண பத்திரிகையும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தநிலையில் தேசிங்கு பெரியசாமியுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து தோழிகளுக்கும் சகோதரிகளுக்கும் பேச்சிலர் பார்ட்டி கொடுத்துள்ளார் நிரஞ்சனி. இது குறித்த புகைப்படங்களை நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
