திரௌபதி இயக்குனரின் படத்தில் டிவி பிரபலம் கதாநாயகி - யார்.?
திரௌபதி இயக்குனரின் படத்தில் டிவி பிரபலம் கதாநாயகி - யார்.?

தமிழன் 'திரௌபதி' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மோகன்.இவர் திரைப்படம் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யப்பட்டாலும் அந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திரௌபதி படத்தை அடுத்து ருத்ரதாண்டவம் என்ற படத்தை இயக்க இருப்பதாகவும் அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்போம், ஈசன் அருளால் அனைத்து செயல்களும் நல்லதே நடக்கும் என்றும் சமீபத்தில் இயக்குனர் மோகன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.

இந்த படத்திலும் திரௌபதி படத்தில் ஹீரோவாக நடித்த ரிச்சர்ட் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கும் நடிகை குறித்த தகவல் வந்துள்ளது. ருத்ரதாண்டவம் படத்தின் நாயகியாக நடிக்க 'தர்ஷா குப்தா' ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பதும் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார் என்பதும் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி-2 என்ற ரியாலிட்டி தொடரில் இவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா அறிமுகமாகிறார் என்று இயக்குனர் மோகன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சிகளிலும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் தர்ஷா, பெரிய திரையிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வெற்றி நடிகையாக வலம் வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.