நானும் உதயநிதியும் மற்ற பள்ளிகளுக்கு சைட் அடிக்க போவோம் - மனதை திறந்து கொட்டிய விஷால்
'பள்ளியில் படிக்கும்போது மற்ற பள்ளிகளுக்கு சைட் அடிக்க ஒன்றாக சென்று இருக்கிறோம்' என விஷால் உதயநிதி பற்றி கூறியது கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

'பள்ளியில் படிக்கும்போது மற்ற பள்ளிகளுக்கு சைட் அடிக்க ஒன்றாக சென்று இருக்கிறோம்' என விஷால் உதயநிதி பற்றி கூறியது கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷால் நடித்துள்ள லத்தி படத்தை அவர் நண்பர்களும் நடிகர்களுமான நந்தா, ரமணா தயாரித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது, இதில் பட குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர் குறிப்பாக சிறப்பு அழைப்பாளராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது இந்த பட பேசிய விஷால் கூறியதாவது, 'இந்த படம் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக போலீஸ் கான்ஸ்டபிள் வலியை பேசும் படமாக உருவாகியுள்ளது, இங்கு வந்திருக்கும் உதயநிதி ஸ்டாலினும் நானும் பள்ளியிலும், கல்லூரியிலும் ஒன்றாக படித்தவர்கள் பள்ளியில் படிக்கும் போது மற்ற பள்ளிகளுக்கு சைட் அடிக்க ஒன்றாக சென்றிருக்கிறோம். என்னைப் பற்றி ரகசியங்கள் அவருக்கும், அவரைப்பற்றி ரகசியங்கள் எனக்கும் தெரியும் இருவரையும் கடத்தி வைத்துக் கொண்டு கேட்டால் அது தெரியவரும் உதயநிதி சில வருடங்களுக்கு முன்பு அரசியல ஆசை இல்லை இருந்தார் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என வற்புறுத்தியவர்களில் நானும் ஒருவன்' என்றார்.