ஆந்திராவில் தெலுங்கு படத்தைவிட அதிக திரையரங்கில் வெளியாகும் வாரிசு - தெலுங்கிலும் மாஸ் காட்டும் 'தளபதி'
தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தில் விஜய் ராஸ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
By : Mohan Raj
தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தில் விஜய் ராஸ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி பிரபல பெரும் தெலுங்கு தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தில் ராஜு தயாரித்துள்ளார். இதனால் அவர் தெலுங்கானா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வாரிசு படத்தின் தெலுங்கு டப்பிங் காண வாரிசுடு படத்தை நேரடி தெலுங்கு படங்களை விட அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார்.
வாரிசுடு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கொடுக்கக் கூடாது என்று கடந்த சில மாதங்களாகவே தெலுங்கு திரை உலகில் கடும் சர்ச்சை எழுந்து வருகிறது. நேரடி தெலுங்கு படங்களான சஞ்சீவியின் 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ஹா ரெட்டி' ஆகிய படங்களை விட வாரிசுடு படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கிடப்பட்டுள்ளது.
முக்கிய தியேட்டர்கள் அனைத்திலுமே வாரிசுடு படம் வெளியிடுவதற்கு எப்போதோ ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது என்கின்றனர். எடுத்துக்காட்டாக முக்கிய நகரமான விசாகப்பட்டினத்தில் வாரிசுடு படம் 8 தியேட்டர்களிலும் வால்டர் வீரய்யா 5 தியேட்டர்களிலும் வீரசிம்ஹா ரெட்டி 4 தியேட்டர்களிலும் வெளியாக உள்ளது.