Kathir News
Begin typing your search above and press return to search.

இளைஞர்கள் மத்தியில் பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் 'வாத்தி' இசை வெளியீட்டு விழா

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வாத்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

இளைஞர்கள் மத்தியில் பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் வாத்தி இசை வெளியீட்டு விழா

Mohan RajBy : Mohan Raj

  |  26 Jan 2023 12:27 PM GMT

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வாத்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சம்யுக்தா மேனன் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக உள்ளது. லலித்தின் செவன் ஸ்கிரீன் நிறுவனம் வாத்தி படத்தின் தமிழக வெளியீடு உரிமையை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். வருகின்ற பிப்ரவரி 4ம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News