Kathir News
Begin typing your search above and press return to search.

வடிவேலுவிற்கு கிடைக்காத 'நாய் சேகர்' !

Cinema News.

வடிவேலுவிற்கு கிடைக்காத நாய் சேகர் !

Mohan RajBy : Mohan Raj

  |  17 Sep 2021 2:30 AM GMT

'நாய் சேகர்' தலைப்பு வடிவேலுவிற்கு கிடைக்கவில்லை மாறாக சதீஷ் நடிக்கும் படத்திற்கு கிடைத்துள்ளது.





வைகைப்புயல் வடிவேலு 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதனையடுத்து இயக்குனர் சுராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு "நாய் சேகர்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தலைப்பை வேறு ஒருவர் பதிவு செய்து வைத்திருந்ததால் இந்த தலைப்பிற்கு சிக்கல் ஏற்பட்டது. பேச்சுவார்த்தை வடிவேலுவிற்கு இந்த தலைப்பு கிடைக்கவில்லை.





ஆனால் நேற்று சதீஷ் நடிக்கும் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டனர். படத்திற்கு நாய் சேகர் என தலைப்பிட்டு, ஒரு நாய் உடன் சதீஷ் இருப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், கிரிக்கெட் வீரர் சதீஷ் ஆகிய இருவரும் வெளியிட்டனர். இதனால் 'நாய் சேகர்' தலைப்பு வடிவேலுவிற்கு இல்லை என ஊர்ஜிதமாகிவிட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News