இசைஞானி மேடையில் பாடவிருக்கும் வைகைப்புயல் - எங்கே? எப்போது?
மதுரையில் நடக்கும் இளையராஜா இசை நிகழ்ச்சிகள் வைகைப்புயல் வடிவேலு படவிருக்கிறார்.

மதுரையில் நடக்கும் இளையராஜா இசை நிகழ்ச்சிகள் வைகைப்புயல் வடிவேலு படவிருக்கிறார்.
நடிகர் வடிவேலு சிறந்த நடிகர் மட்டுமல்லாது சிறந்த பாடகரும் கூட இவர் நடித்த சில படங்களில் இவர் பாடல்களை பாடியுள்ளார், அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் மதுரையில் நடக்க இருக்கும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் வடிவேலு படவிருக்கிறார். இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில் வடிவேலு கூறியுள்ளதாவது, 'நான் பிறந்த மதுரை மீனாட்சி பட்டினத்திற்கு எங்கள் இசைஞானி கச்சேரி நடத்த வருகிறார் அதை கேட்டவுடன் மகிழ்ச்சியாக இருந்தது, அந்தக் கச்சேரிக்கு நானும் கண்டிப்பாக வருகிறேன். தரையில் பாடிய என்னை பாட வைத்தது இளையராஜாதான். இசை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா முன் பாடி உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுவேன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் எனக்கு மகிழ்ச்சி' என குறிப்பிட்டுள்ளார்.