பவன் கல்யாண் படத்தின் டிரைலரை காண்பதற்கு கதவை உடைத்து திரையரங்கில் நுழைந்த ரசிகர்கள்.!
இப்படத்தின் டிரைலர் நேற்று (29ம் தேதி) விசாகப்பட்டினத்தில் உள்ள திரையரங்கில் ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
By : Thangavelu
நடிகர் பவன் கல்யாண் நடித்துள்ள 'வக்கீல்சாப்' படத்தின் டிரைலர் நேற்று (29ம் தேதி) வெளியிடப்பட்டது. இப்படத்தின் டிரைலரை காண்பதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு திரையரங்கின் கண்ணாடி கதவுகளை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் உள்ளே சென்றுள்ளனர்.
நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம், தெலுங்கில் வக்கீல்சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், நிவேதா தாமஸ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நேற்று (29ம் தேதி) விசாகப்பட்டினத்தில் உள்ள திரையரங்கில் ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது திரையரங்கு வெளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியிருந்தனர். இதனால் அனைவரும் ஒரே நேரத்தில் திரையரங்கில் செல்ல முற்பட்டபோது, கண்ணாடி கதவை உடைத்துக்கொண்டு திரையரங்கில் ரசிகர்கள் நுழைந்தனர். இதில் சில ரசிகர்களுக்கு கண்ணாடி துகள்களால் காயம் ஏற்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் டிரெய்லரை பார்த்துவிட்டு சென்றனர்.